×

சில்வார்பட்டியில் ஆணையாளர் ஆய்வு

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் நல ஆணையாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். சில்வார்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ராஜபாண்டி பரிந்துரையில் வீட்டுக்கு குழாயுடன் கூடிய பைப் லைன் அமைத்தல் வேலைக்கு ரூ.47.9லட்சம் மதிப்பீட்டில் 311 வீட்டுக்குழாய் இணைப்புகளும், 34 ஆயிரம் மீட்டர் பைப் லைன் அமைத்து வீடுகளுக்கு வீட்டுக்குள் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆணையாளர் வெங்கடேசன் ஆய்வு செய்து திறந்து வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் மதுமதி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தனிக்கை) சிவக்குமார், மாவட்ட உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுபா, ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சில்வார்பட்டியில் ஆணையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Silwarpatti ,Commissioner ,Venkatesan ,Devadanapatti ,Silwarpatti Panchayat ,District Panchayat Committee ,Dinakaran ,
× RELATED பொதுத்தேர்வுக்கு செல்லும்போது...