வார்டுகளுக்கு சென்று குறைகள் தீர்க்கப்படும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர், நவ.30: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் அனைத்து துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்கள் மகேஸ்வரி (தஞ்சாவூர்), லெட்சுமணன் (கும்பகோணம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக திருவையாறில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சக்திவேல் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

The post வார்டுகளுக்கு சென்று குறைகள் தீர்க்கப்படும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: