×

காத்திருப்பு அறையில் மது குடித்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்ட் வீடியோ வைரலானதால் நடவடிக்கை வாணியம்பாடி கிளை சிறையில் உள்ள

வேலூர், நவ.30: வாணியம்பாடி கிளைச்சிறையில் உள்ள காத்திருப்பு அறையில் தலைமை சிறைக்காவலர் மது குடித்த வீடியோ வைரலான நிலையில், சஸ்பெண்ட் செய்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவிட்டார். வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 10 கிளை சிறைகள் உள்ளன. இதில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை அரசினர் தோட்டத்தில் உள்ள கிளை சிறையில், சிறைக்காவலர்களுக்கென காத்திருப்பு அறை உள்ளது. இங்கு பணி முடித்த பின்னர் சிறைக்காவலர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் சிறைக்காவலர் ஒருவர், அடிக்கடி அந்த அறையில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் மது வாங்கிச்சென்று காத்திருப்பு அறையில் குடித்துள்ளார். வழக்கமாக சிறை கைதிகளுக்கு வெளி உணவு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஆனால் சிறைக்காவலர் ஒருவர் மதுபாட்டிலை வாங்கி வந்து சிறையில் உள்ள அறையில் குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் மது அருந்தியவர் வாணியம்பாடி கிளைச்சிறை தலைமை சிறைக்காவலர் ஜெயகுமார் என ெதரியவந்தது. இதையடுத்து, சிறை காவலர்கள் காத்திருப்பு அறைக்கான விதிகளை மீறி மது அருந்திய தலைமை சிறை காவலர் ஜெயகுமாரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவிட்டார். இச்சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காத்திருப்பு அறையில் மது குடித்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்ட் வீடியோ வைரலானதால் நடவடிக்கை வாணியம்பாடி கிளை சிறையில் உள்ள appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi branch ,Vellore ,
× RELATED தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி...