×

திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறை சோதனை: என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். மணல் குவாரி விவகாரத்தில் போலி ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மணல் குவாரி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாதது ஏன்? என்று என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பினார்.

The post திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறை சோதனை: என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,DMK government ,NR Ilango ,Chennai ,Union government ,NR ,Ilango ,Dinakaran ,
× RELATED சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை