அரியலூரில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணி கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

அரியலூர் நவ 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியினை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பயிற்சி மையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் பழைய பேருந்துநிலையம் வழியாக சென்று அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.மேலும், இந்தப் பேரணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்றவர்கள், குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், போக்சோ வழக்குகளை உடனே புகார் அளிப்போம், சமூக வலைதளங்களில் குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை பகிர்வது தண்டனைக்குரிய குற்றமாகும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல்பரிசு யாழினி, 10ம் வகுப்பு, புனித ஜோசப் சிறார் இல்லம் குழந்தைகள் இல்லம், அரியலூர், இரண்டாம் பரிசு ஸ்வேதா, 9ஆம் வகுப்பு, திருவள்ளுவர் குழந்தைகள் இல்லம், லிங்கத்தடிமேடு, மூன்றாம் பரிசு அபிநயா 11ம் வகுப்பு, புனித சூசையப்பர் குழந்தைகள் இல்லம், தென்னூர் ஆகியோருக்கு பரிசுகளும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், கவிதைப்போட்டியில் முதல் பரிசு மணிபாரதி, 10 ம் வகுப்பு, புனித ராபேல், குழந்தைகள் இல்லம், வரதராஜன்பேட்டை, இரண்டாம் பரிசு சரிதா, 12ம் வகுப்பு, புனித ஜோசப் சிறார் இல்லம் குழந்தைகள் இல்லம், அரியலூர், மூன்றாம் பரிசு ஆனந்தி, 9ம் வகுப்பு, திருவள்ளுவர் குழந்தைகள் இல்லம், லிங்கத்தடிமேடு ஆகியோருக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும், மேலும், ஒவியப்போட்டியில் முதல் பரிசு சத்யா, 12ம் வகுப்பு, புனித ஜோசப் சிறார் இல்லம் குழந்தைகள் இல்லம், அரியலூர், இரண்டாம் பரிசு கவிக்குயில், புனித சூசையப்பர் குழந்தைகள் இல்லம், தென்னூர், மூன்றாம் பரிசு காவியா, 11ம் வகுப்பு, புனித சூசையப்பர் குழந்தைகள் இல்லம் கோக்குடி ஆகியோருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மேலும், சிறப்பு பரிசு தனம், 3ம் வகுப்பு, திருவள்ளுவர் குழந்தைகள் இல்லம், லிங்கத்தடிமேடு என்ற மாணவிக்கும் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார் .

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன், சமூக நல அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் (அரியலூர்) ஆனந்தவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரியலூரில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணி கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: