×

வாலிபர் மீது போக்சோ வழக்கு

சேலம், நவ.26: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் ேசர்ந்த ஹரிகரன்(22) என்பவர் பழகி வந்துள்ளார். அப்போது, ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள், வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஹரிகரன் மீது, போக்சோ சட்டத்தில் சேலம் டவுன் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

The post வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Salem ,Kichipalayam ,Jesarantha Harikaran ,Dinakaran ,
× RELATED நியாயம் கேட்ட சகோதரி முன்பும் தவறாக...