தெற்கு வீரபாண்டியபுரத்தில் பள்ளி கட்டிடம், நிழற்குடை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார்

ஓட்டப்பிடாரம், நவ.26: ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி, ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட புதியம்புத்தூர் அருகே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் செயல்படும் யூனியன் நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ. 28.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய 2 வகுப்பறைகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ, 5.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகட்டிடங்களின் திறப்பு விழா ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடந்தது.

வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், சரஸ்வதி, மகாலட்சுமி, பிடிஓக்கள் சிவபாலன், கிரி (கி.ஊ), பஞ். தலைவர் மாரியம்மாள் சுப்பையா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்டிடங்களைத் திறந்துவைத்த சண்முகையா எம்எல்ஏ, குத்து விளக்கேற்றி பேசினார். நிகழ்ச்சிகளில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரான ஓட்டப்பிடாரம் பஞ். தலைவர் இளையராஜா, துணை தாசில்தார் ஸ்டாலின், துணை பிடிஓ துரைராஜ், பணி மேற்பார்வையாளர் பரமசிவன், தலைமை ஆசிரியர் இமாக்குலேட், விஏஓக்கள் சுடலைமுத்து, ருக்மணி, மாவட்டப் பிரதிநிதி ஜோசப் மோகன், பிரதிநிதி அசோக், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லசாமி, தொண்டரணி கோபால் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post தெற்கு வீரபாண்டியபுரத்தில் பள்ளி கட்டிடம், நிழற்குடை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: