சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தொல்லியல் சிறப்புபெற்ற இடங்களுக்கு பாரம்பரிய சுற்றுலா

 

தஞ்சாவூர், நவ.26: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சுற்றுலா குழுமம் சார்பில் உலக பாரம்பரிய வாரம் தொடர்ச்சியாக தமிழ்பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கொண்ட சுற்றுலா பேருந்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார தொடர் நிகழ்வுகளின் நிறைவாக நேற்று இந்திய சுற்றுலா, இணைந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நடைபெற்ற பாரம்பரிய சுற்றுலா நிகழ்வினை தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு பெற்ற இடங்களான திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம், திருப்புள்ளமங்கை கோவில், திருவையாறு காவிரி படித்துறை, திருச்சினம்பூண்டி கோவில், ஒரத்தநாடு முத்தாம்பால் சத்திரம், மனோஜிபட்டி உப்பரிகை, ராஜா கோரி கைலாஷ் மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு பாரம்பரிய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சுற்றுலாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், இன்டாக் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வரலாற்று மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர். இந்த பாரம்பரிய சுற்றுலாவினை வரலாற்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ், தொல்லியல் பாதுகாவலர் முனைவர். பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமா ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.

The post சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தொல்லியல் சிறப்புபெற்ற இடங்களுக்கு பாரம்பரிய சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: