சிங்கம்புணரி, நவ.26: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டப் பட்டது. இதில் அமைச்சர் பேசும் போது, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 10 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் புழுதிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை 7 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இப்பள்ளிக்கென விளையாட்டு திடல் அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில், அதனையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிங்காரம், துணை செயலாளர் மாதவன் கலந்து கொண்டனர்.
The post அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.1.69 கோடியில் கட்டிட பணிக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.
