வேலைவாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றவில்லை என ஆந்திர முதல்வர் மீது போலீசில் புகார்: தெலுங்கு தேசம் கட்சியினர் அதிரடி

திருப்பதி: திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ரவி தலைமையில் நேற்று திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மீது புகார் அளித்தனர். அதில், ‘‘ஆந்திர மாநில தேர்தல் பிரசாரத்தில் தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஜெகன்மோகன், நான் ஆட்சிக்கு வந்தவுடன் அரசுத்துறையில் காலியாக உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவேன். காவல் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவேன் என அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது வரை அரசு வேலைவாய்ப்புகளில் காலியாக இடங்களை மாநில அரசு நிரப்பாமல் உள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து நீதி கிடைக்க அலிபிரி போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’’ என்றனர்.

The post வேலைவாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றவில்லை என ஆந்திர முதல்வர் மீது போலீசில் புகார்: தெலுங்கு தேசம் கட்சியினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: