தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் அமைச்சர் இன்று சுற்றுப்பயணம்

 

தர்மபுரி, நவ.22: தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று(22ம் தேதி) கலந்து கொள்கிறார். இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் இன்று (22ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

நல்லம்பள்ளி சிவாடி, தொம்பரகாம்பட்டி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி, இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு, பாரதிபுரம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கு, அதகப்பாடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். எனவே, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் அமைச்சர் இன்று சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Related Stories: