தேனி மாவட்ட நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா

தேனி, நவ. 21: தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வாரவிழாவிற்கான நிறைவு விழா நேற்று நடந்தது. தேனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கடந்த ஒருவாரமாக தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டு வந்தது. நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிறைவு விழாவிற்கு வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட இணை செயலாளர்கள் நாகராஜன், முருகேசன் முன்னிலை வகித்தனர். முதல்நிலை நூலகர் முத்துக்குமரன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை வாசகர் வட்ட பொருளாளர் சிதம்பரம் தொகுத்து வழங்கினார்.

இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிக்கருப்பையா தலைமையில் ‘இன்றைய சூழலில் புத்தக வாசிப்பு படித்து மகிழ்வதற்கே, பின்பற்றி வாழ்வதற்கே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. படித்து மகிழ்வதற்கே என்ற அணியில் முதுகலை ஆசிரியர் யாழ்ராகவன், ஆசிரியை லட்சுமி குமரேசன் ஆகியோரும், பின்பற்றி வாழ்வதற்கே என்ற அணியில் முதுகலை ஆசிரியர் முத்துக்குமார், விஏஓ கவிதா ஆகியோரும் பேசினர்.

இவ்விழாவில் நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் எழுத்தாளர் நீலபாண்டியன், கவிஞர் ஞானபாரதி, பணிநிறைவு பெற்ற நூலகர் சந்திரசேகரன், நூலகர்கள் விஜயமூர்த்தி, பரமன், பாலமுருகன், கவிதா மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சவடமுத்து நன்றி கூறினார்.

The post தேனி மாவட்ட நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா appeared first on Dinakaran.

Related Stories: