நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதால் ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தை பொறுத்தவரை சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்றும் தமிழக அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு மேலாக வரி வருவாய் தமிழக அரசு மூலமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது போல் பதிவு செய்யப்பட்டதால் அண்டை மாநிலங்களிலிருந்து வாடகைக்கு கார் எடுத்து பயன்படுத்தி வந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வரும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. மேலும் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளது.
The post அனைத்து வகை சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி: போக்குவரத்துத் துறை appeared first on Dinakaran.
