கொள்ளிடம் அருகே சாலையோர பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து

 

கொள்ளிடம்,நவ.17: கொள்ளிடம் அருகே சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்தது. இதில் பயணிகள் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து பழையாறு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். மாதானம் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு செல்லும்பொழுது மழை பெய்து கொண்டிருந்ததால் எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள பள்ளத்தில் பேருந்து இறங்கியது.

இதனால் பேருந்து டிரைவர் உடனடியாக பேருந்தை லாவகமாக அங்கேயே நிறுத்தினார். அருகில் வாய்க்கால் இருந்ததால் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழ் இறக்கி விட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் சாய்ந்த பேருந்தை பொக்லேன் இயந்திரம் கொண்டு பள்ளத்திலிருந்து பேருந்தை மீட்டனர். பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள் ஒரு மணி நேரம் கொட்டும் மழையிலும் காத்திருந்து, பின்னர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு பயணித்து சென்றனர்.

மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடியே காத்திருந்தனர். பலர் ஆட்டோ மற்றும் தனியார் வாகன மூலம் தங்களது வீடுகளுக்கு பயணித்தனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்ஸில் சென்ற அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

The post கொள்ளிடம் அருகே சாலையோர பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து appeared first on Dinakaran.

Related Stories: