தாட்கோ மூலம் தையல் தொழிலுக்கு கடனுதவி

 

புதுக்கோட்டை, நவ.11: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின்கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பயனாளிகளிடம் இருந்து தையல் பணிகள் செய்வதற்கு தகுதியானபயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளம் www.tahdco.com //www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ மூலம் தையல் தொழிலுக்கு கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: