ராஷ்மிகா போலி வீடியோ சர்ச்சை 3 ஆண்டுகள் சிறை: ஒன்றிய அரசு எச்சரிக்கை

டெல்லி: ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து தவறாக மார்பீங் செய்யப்பட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், இனிமேல் போலியாக வீடியோவை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று, நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது.

அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள் என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு அமிதாப் பச்சன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா குறித்து பரவும் வீடியோ போலி இப்படி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிறகு, ராஷ்மிகா மந்தனாவும் இந்த மார்பீங் வீடியோ குறித்து வருத்தத்துடன் விளக்கம் கொடுத்திருந்தார். நாகசைதன்யா, சின்னமையி, கே.கவிதா உள்ளிட்ட பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், இனிமேல் இப்படி தவறாக மார்பீங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த இப்படி தவறான மார்பீங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில, போலியாக வீடியோவை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post ராஷ்மிகா போலி வீடியோ சர்ச்சை 3 ஆண்டுகள் சிறை: ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: