மாவட்ட தமிழியக்க உறுப்பினர் அறிமுகம்

 

மதுரை, நவ. 7: மதுரை மாவட்ட தமிழியக்கம் சார்பில் உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி தமிழியக்கத்தின் நோக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். தமிழியக்கத்தின் மாவட்டப் பொருளாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகரச் செயலாளர் முனைவர் முத்துமணி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் நபி மற்றும் துணைச் செயலாளர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினர்.

தனியார் கல்லூரி தாளாளர் தனவேலன் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிப்பதாக உறுதியளித்தார். ஆன்மீக சொற்பொழிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னப்பா, வெங்கடேசன், தமிழ்குமரன் தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கினர். சுப்பிரமணியன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் அபுதாஹிர் செய்திருந்தார்.

The post மாவட்ட தமிழியக்க உறுப்பினர் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: