தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு

திண்டுக்கல், நவ. 6: திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை யொட்டி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜை பாலபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள், செயல் அலுவலர் முருகன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

The post தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: