இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் விமான நிலையம் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மனு அளித்தனர். மனுவில், ‘‘தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டதோடு, ஒரு படகுக்கு 2 கோடி 27 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் ஊர் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தனர்.
The post ஒரு படகுக்கு 2 கோடி அபராதம் ஒன்றிய அமைச்சரிடம் தூத்துக்குடி மீனவர்கள் மனு appeared first on Dinakaran.
