சிவகாசி, நவ.1: விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக சிவகாசி தீயணைப்பு துறை அலுவலகத்தில் பட்டாசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையிலும் சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பட்டாசு கடைகளில் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அவசர வழியை பயன்படுத்துவது, தீயணைப்பு கருவிகளை உபயோகப்படுத்துவது குறித்தும் விளக்கினர்.
The post சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் பட்டாசு வியாபாரிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
