தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு சங்கம் ஆலோசனை கூட்டம்

 

திருவில்லிபுத்தூர், அக்.31: திருவில்லிபுத்தூரிலுள்ள தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று மாவட்டத் தலைவர் யோகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பாண்டிச்செல்வம் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் கோவிந்தம்மாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் சங்கிலிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் தங்கவேல், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பாளர் திருப்பதி, கணேசன், முத்துராமலிங்கம், சுப்புராஜ் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அரசோடு இணைந்து செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளியில் உள்ள கழிப்பறை உட்பட தூய்மைப் பணிக்காக நிரந்தர பணியாளர் அமர்த்தப்பட வேண்டும், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், ஒன்றிய, மாநில அரசுகள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தோடு ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு சங்கம் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: