செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் சீதளாதேவி மாரியம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும் ஐதீகம். இதனால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஐப்பசி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் ஒன்றுக்கூடி விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் சீதளாதேவி மாரியம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: