தொண்டியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவில் சுவாமி வீதியுலா

தொண்டி: தொண்டியில் உள்ள தொண்டியம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா, அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு தொண்டியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த தொண்டியம்மன் ஆலயத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா மற்றும் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. தொண்டியம்மன் கோயிலில் புறப்பட்ட சாமி உலா கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிவன் கோயிலை அடைந்து அங்கு பக்தர்கள் முன்னிலையில் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு மகாசக்திபுரம் கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் சென்றது. தொண்டியம்மன் வழி நெடுகிலும் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தொண்டியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவில் சுவாமி வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: