வலங்கைமான் அருகே வேகத்தடை எச்சரிக்கை இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் வேகத்தடை மீது வெள்ளை கோடுகள் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயில் அருகே இரண்டு வேகத்தடைகள் உள்ளன. அப்பகுதியில் வேகத்தடை உள்ளது குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் எந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைக்கவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வேகத்தடைகள் மீது அடிக்கப்பட்ட வெள்ளை நிற கோடுகள் அழிந்துவிட்டன. இதனால் அப்பகுதியில் வேகத்தடை இருப்பதே தெரியாத நிலை உள்ளது. மிக அருகில் வந்து வாகன ஓட்டிகள் பிரேக் போடுவதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

The post வலங்கைமான் அருகே வேகத்தடை எச்சரிக்கை இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: