ராஜபாளையத்தில் தென்னிந்திய ஹாக்கி போட்டி துவக்கம்

ராஜபாளையம், அக். 23: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ஜெய் பீம் ஹாக்கி அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு தென்னிந்திய ஹாக்கி போட்டி துவங்கியது. நாக்கவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, சென்னை உட்பட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 26 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இப்போட்டியை நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வம் துவக்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் விருதுநகர் மற்றும் கோவில்பட்டி அணிகள் மோதின. வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசு தொகை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்போட்டி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்படுகளை ராஜபாளையம் ஜெய் பீம் ஹாக்கி அகாடமியினர் செய்துள்ளனர்.

The post ராஜபாளையத்தில் தென்னிந்திய ஹாக்கி போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: