ராமானூர் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

 

கரூர், அக். 20: கரூர் ராமானூர் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்-திருச்சி சாலையில் தெரசாகார்னர் பகுதியில் இருந்து ராமானூர், பசுபதிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராமானூர், கொளந்தானூர் சாலையில் சென்று வருகிறது. கரூர் பகுதியில் இருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்களும் இந்த சாலையில் சென்று வருகின்றனர். இந்நிலையில், கொளந்தானுர் ராமானூர் இடையே வளைவு பாதை உள்ளது.

மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெறுகிறது. இந்த பகுதியின் அருகிலேயே டாஸ்மாக் கடையும் இருப்பதால் வாகன ஓட்டிகள் வளைவு பாதையை கடந்து செல்லவே சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வளைவு பாதையோரம் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராமானூர் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: