மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, அக்.20: சிவகங்கை அரண்மனைவாசல் முன் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும். சிவகங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் வழிப்பறி கொள்ளை தடுத்து நிறுத்த வேண்டும்.சிவகங்கையில் இருந்து கூவானிப்பட்டி, ஈசனூர் வழியே இடையமேலூர் சென்று வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் பாண்டிமீனாள் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கண்டன உரையாற்றினார். இ.கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் மருது, மாதர் சம்மேளன நிர்வாகிகள் குஞ்சரம், சவுந்திரவள்ளி, முத்து, சேவாத்தாள், ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சரண்யா நன்றி கூறினார்.

The post மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: