கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காவல்நிலைய செயல்முறை பயிற்சி

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது. மாநில நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். ராஜபாளையம் வடக்கு நிலையம் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் காவலர்களின் பல்வேறு பதவி நிலைகளை பற்றி விளக்கினார். உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சட்டப்பணிகள் பற்றி விளக்கமாக கூறினார். மேலும் இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சி சட்டம், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை போன்றவற்றை பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் சினிமாவில் உள்ள காவல் நிலைய காட்சிக்கும் நடைமுறை குற்ற விசாரணை முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா காவல் நிலையங்களும் இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றன என்றார். காவல் நிலையத்தில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் ஆவணங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை பற்றியும் செயல் விளக்கம் அளித்தார். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏபி ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

The post கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காவல்நிலைய செயல்முறை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: