மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான பயிற்சி வழங்க ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் பார் ஹெல்த்கேர் நேற்று முன்தினம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் நடைபெற்ற விழாவில் ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சு தாமஸ் ஆபிரகாம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திட்ட இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரவுண்ட் டேபிள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏரியா-2ன் ஏரியா சேர்மன் சுஜய் சுதர்ஷன் மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிர்வாக இயக்குநர் கார்த்திக் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு தரப்பினரின் கூட்டு முயற்சியில் திறன் மேம்பாடு துறையில் வேலைவாய்பு வழங்க வழிவகை செய்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதார துறையில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உகந்த சூழலை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டு முயற்சியின் விதிமுறைகளின் கீழ், டிஎன்எஸ்டிசிஎச் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகியவை ரவுண்ட் டேபிளின் மதிப்பிற்குரிய ‘எப்டிஇ’ பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான தொழில் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகளை வழங்குவதில் இணைந்து கொள்ள உறுதியளித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான பயிற்சி வழங்க ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: