பொன்னமராவதி பகுதியில் மிதமான மழை

 

பொன்னமராவதி,அக்.17: பொன்னமராவதி பகுதியில் நேற்று காலை தொடர் மழை பெய்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை பரவலாக தொடர் மழை பெய்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை நீடித்தது. இதன் பின்னர் சாரல் விழுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்த்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பலர் நனைந்தபடி சென்றனர். இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நடவுப்பணியும் பாதிப்படைந்தது.

The post பொன்னமராவதி பகுதியில் மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: