இந்தியா முன்னெப்போதையும்விட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. வேகமாக மாறிவரும் தேவைகள், பணிகளின் தன்மைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துவது அவசியம். தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்தியாவின் வேலைவாய்ப்பு உருவாக்கம் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. இந்திய கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை வேகமாக குறைந்து வருகிறது. வளர்ச்சியின் பலன்கள் கிராமம், நகரம் இரண்டையும் சமமாக சென்றடைகிறது. இதனால் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் புதிய வாய்ப்புகளும் சமமாக அதிகரித்து வருகின்றன” என்று இவ்வாறு பெருமிதத்துடன் கூறினார்.
The post வேலைவாய்ப்பின்மை வெகுவாக குறைந்துள்ளது இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.