புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா கேட்டுக்கொண்டுள்ளார். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2023-24ம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.34,200 கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.513 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: