பார்வதிபுரம் நாயர் சேவை சங்க பொதுக்குழு கூட்டம்

நாகர்கோவில், அக்.10 : பார்வதிபுரம் நாயர் சேவை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் குடும்ப சம்மேளனம் மற்றும் ஓணம் திருவிழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவிலில் நடந்தது. சங்க தலைவர் விஜயகுமாரன் நாயர் தலைமை வகித்தார். குமாரகோவில் நூருல் இஸ்லாம் நிகர்நிலை பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஜனார்தனன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். கன்னியாகுமரி நாயர் சேவை சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குமாரன் நாயர் பேசினார். சங்க செயலாளர் சாம்பசிவன் நாயர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாபு தணிக்கை செய்த வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார். குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 ஏழை மாணவ மாணவியருக்கு ரூ.60 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சுதந்திர தினவிழாவில் சங்க உறுப்பினர் ரெஜிதாவின் பணியை பாராட்டி கலெக்டர் சான்றிதழ் வழங்கிய நிலையில், விழாவில் அவர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

The post பார்வதிபுரம் நாயர் சேவை சங்க பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: