நாகர்கோவிலில் ஆதார் மையங்களில் குவிந்த மக்கள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் விடுமுறை தினமான நேற்று ஆதார் திருத்த பணிகளுக்காக பொதுமக்கள் குவிந்தனர்.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதார் மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் ஏராளமானோர் ஆதார் மையங்களுக்கு வருகை தருகின்றனர். விடுமுறை நாளான நேற்றும் காலை முதலே பொதுமக்கள் ஆதார் மையங்களில் குவிந்திருந்தனர். காலையில் ஆதார் மையங்கள் வருகின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மட்டுமின்றி பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆதார் மையத்திற்கு வருகை தந்து பதிவுகளை புதுப்பித்து வருகின்றனர். நேற்று சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஆதார் திருத்த பணிகளை மேற்கொண்டனர். பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக ஆதார் விபரங்களை புதுப்பிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post நாகர்கோவிலில் ஆதார் மையங்களில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: