தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி,அக்.8: தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சோமநாதன், மனோகரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பாலமுருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் கேவிகேசாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்றார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் போட்டிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ‘கலைஞர் கருத்துக்கள், கவிதைகள் என பலவற்றின் மூலம் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தலை குனிந்து எழுதினார். 1998ல் முதல் முறையாக கணினித்துறை மூலம் தமிழ்வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அது தான் உலக அளவில் தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழ் மொழி செம்மொழி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் கலைஞர். கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை இனிவரும் எதிர்கால தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்றார்.

விழாவில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்டமீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி,மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வக்கீல் அசோக், ரமேஷ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல் நாராயணன், மாநகர இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி ரவி, இலக்கிய அணி சக்திவேல், கவுன்சிலர் ஜாக்குலின்ஜெயா, வட்டச்செயலாளர்கள் பாலு என்ற பாலகுருசாமி, ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.

The post தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் appeared first on Dinakaran.

Related Stories: