வறட்சி நிவாரணம் கோரி மனு

 

சிவகங்கை, அக்.6: இளையான்குடி அருகே உள்ள கிராமத்தினர் வறட்சி நிவாரணம் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடி ஒன்றியம் கட்டனூர் ஊராட்சி நல்லூர், கட்டனூர், தென்கடுக்கை வடகடுக்கை பகுதியில் நெல் விவசாயம் மழையில்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டது.

பயிர்கள் முற்றிலும் கருகிய நிலையில் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post வறட்சி நிவாரணம் கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: