தென்காசியில் வன உயிரின வார விழா

நெல்லை, அக்.4:நெல்லை வனக்கோட்டம் உயிரினச் சரணாலயம் மாவட்ட வன அலுவலர் முருகன் அறிவுறுத்தலின் பேரில் கடையநல்லூர் வனசரகம் மூலம் வன உயிரின வாரவிழா தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி வேதியியல் விரிவுரையாளர் மரியபிரபா வரவேற்றார். கல்லூரியின் தலைவர் புதிய பாஸ்கர், கல்லூரி தாளாளர் கல்யாணி தலைமை உரையாற்றினார். வன உயிரினத்தின் முக்கியத்துவம், வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து வனவர் முருகேசன் குறும்படம் மூலம் விளக்கினார். வனவர்கள், ரவீந்திரன், அம்பலவாணன், வனக்காப்பாளர்கள் ராமசந்திரன், மாதவன், பெருமாள், முத்துசாமி, சுகந்தி, ராஜா, வனக்காவலர் சத்யா மற்றும் கல்லூரி நிர்வாக அதிகாரி மணிகண்டன், கணிப்பொறி துணைத்தலைவர் ஜார்ஜ், சுடலைமுத்து, கட்டிடவியல் துறைத்தலைவர் பாரதிராஜா மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

The post தென்காசியில் வன உயிரின வார விழா appeared first on Dinakaran.

Related Stories: