இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் மகளிர் மசோதா அமலுக்கு வருமா என்பது சந்தேகம்: கனிமொழி விமர்சனம்

சென்னை: ‘கலைஞர் நூற்றாண்டையொட்டி, மகளிர் அணி முன்னெடுக்கும் மகளிர் உரிமை மாநாடு’ வருகின்ற 14ம் தேதி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையிலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பற்றி பேசுவதற்காகவும், இந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கக்கூடிய நிலைகளை குறித்து பேசுவதற்காகவும் வருகின்ற அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கியமான பெண் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

அதில், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட
தகுந்தவர்கள். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் கலந்து கொள்வார். 33% சதவிகித பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு அது என்று நடைமுறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது, இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் இது அமலுக்கு வருமா என்று சந்தேகமாக உள்ளது.

The post இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் மகளிர் மசோதா அமலுக்கு வருமா என்பது சந்தேகம்: கனிமொழி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: