
தஞ்சாவூர்: டெங்கு காய்ச்சலை தடுக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 3 முகாம்களும், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் நான்கு முகாமும், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 3 முகாமும், இது தவிர கூடுதலாக 8 முகாம் என மாவட்டம் முழுவதும் 57 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத் துணை இயக்குனர் கலைவாணி மேற்பார்வையில் ஒரு முகாமிற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு லேப் டெக்னீசியன், ஒரு உதவியாளர் என மருத்துவ குழு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாமில் 2669 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 7 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு லேப் டெஸ்ட்டுக்காக அனுப்பப்பட்டது. இவர்களுக்கு என்ன காய்ச்சல் என்பது அதன் முடிவு வந்த பிறகு தெரிய வரும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 57 இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் appeared first on Dinakaran.