×

கன்னியாகுமரியை குடும்பத்துடன் ரசித்த அமெரிக்க தூதர்

கன்னியாகுமரி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் செட்டி, குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சுமார் 5.40 மணி அளவில் திரிவேணி சங்கமம் கடற்பகுதிக்கு வந்தார். அங்கு சூரிய உதயத்தை கண்டு ரசித்ததோடு கடற்கரையை சுற்றிப்பார்த்தார். அப்போது இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தவர் தனது செல்போனிலும் படம்பிடித்தார். அமெரிக்க தூதர் வருகையையொட்டி அந்த பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் காலை 9.10 மணியளவில் அவர் கன்னியாகுமரியில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.

The post கன்னியாகுமரியை குடும்பத்துடன் ரசித்த அமெரிக்க தூதர் appeared first on Dinakaran.

Tags : kannyakumarii ,KANYAKUMARI ,US ,India ,Eric Kar Chetty ,Kannyakumari ,Tiruvananthapuram ,
× RELATED கனமழை எதிரொலி: திற்பரப்பு அருவியில்...