ஒரு பவுன் தங்கம் ரூ.42,880க்கு விற்பனை: ஒரு கிராம் தங்கம் ரூ.5,390

சென்னை: ஒரு பவுன் தங்கம் ரூ.42,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,168க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. 25ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து ஒரு பவுன் ரூ.44,160க்கு விற்கப்பட்டது. 26ம் தேதி பவுன் ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.44,040க்கும், 27ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது.

29ம் தேதி மட்டும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது. செப்.30ம் தேதியும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு தொடர்ந்து நீடித்து. செப்.30ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.42,880க்கும் விற்கப்பட்டது.

சனிக்கிழமையன்று காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ, மாலையிலும் அதே விலையில் தான் தங்கம் விற்பனையாவது வழக்கம், மேலும் விடுமுறை நாட்களிலும் தங்கம் விலை மாறாது. அதனால், இந்த விலையிலேயே தங்கம் விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

The post ஒரு பவுன் தங்கம் ரூ.42,880க்கு விற்பனை: ஒரு கிராம் தங்கம் ரூ.5,390 appeared first on Dinakaran.

Related Stories: