×

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை: சிசிடிவி காட்சி வீடியோ வைரல்

இஸ்லாமாபாத்: இந்திய அரசால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமான தீவிரவாதியும், அந்த அமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முப்தி கைசர் பரூக் என்பவன் கராச்சியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவனை பின்தொடர்ந்து வந்த ஆசாமிகளால் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமறைவாக இருந்த முஃப்தி கைசர் பரூக் என்பவன், அடையாளம் தெரியாத இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அவனை பின்தொடர்ந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். முப்தி கைசர் பரூக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. வெள்ளை குர்தா, பைஜாமா அணிந்த முஃப்தி கைசர் ஃபரூக் உட்பட பலர் சாலையில் நடந்து செல்வதை அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுவுடன், அவருடன் சாலையில் நடந்து சென்றவர்கள், தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து கலைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட முப்தி கைசர் பரூக், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனாவான். பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததால், அவனை இந்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யமுடியவில்லை. சமீபத்தில், லஷ்கர்-இ-தொய்பாவின் ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் அல் பத்ரின் காலித் ராசா ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பகள், இதுவரை எந்த சந்தேக நபர்களையும் கைது செய்யவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

The post இந்திய அரசால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை: சிசிடிவி காட்சி வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Lashkar ,e-Toiba ,Indian government ,Pakistan ,Islamabad ,Lashkar-e-Toaiba ,Lashkar-e-Toiba ,
× RELATED ஜம்முவில் 4 ராணுவ அதிகாரிகளை கொன்ற 2...