The post யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 வாரத்தில் தங்கம் விலை ரூ.1,288 சரிவு appeared first on Dinakaran.
சென்னை: தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.1288 சரிந்துள்ளது. அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு சவரன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,880க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1288 குறைந்துள்ளது. இந்த விலை நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை சரிவு சவரன் 43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 வாரத்தில் தங்கம் விலை ரூ.1,288 சரிவு appeared first on Dinakaran.