×

மங்காடு ஊராட்சியில் சாலை சேதம் ஊராட்சி தலைவர் புகாருக்கு இன்ஸ்பெக்டர் பதில் வைரல்

நித்திரவிளை, செப்.29: மங்காடு ஊராட்சி பருத்திவிளை – குட்டித்தறை மண் சாலையில் பருத்திவிளை பகுதியை சேர்ந்த ரெஜிகுமார் என்பவர் பள்ளம் தோண்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. இது சம்பந்தமாக மங்காடு ஊராட்சி தலைவர் சுகுமாரன், ரெஜிகுமாரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக களியக்காவிளை போலீசில் சுகுமாரன் கடந்த 21ம் தேதி புகார் கொடுத்தார். ஆனால் சாலையை சேதப்படுத்தியவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் ஊராட்சி தலைவர், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டி களியக்காவிளை இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வருகிறது. இன்ஸ்பெக்டரின் பேச்சு சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மங்காடு ஊராட்சியில் சாலை சேதம் ஊராட்சி தலைவர் புகாருக்கு இன்ஸ்பெக்டர் பதில் வைரல் appeared first on Dinakaran.

Tags : panchayat ,president ,Mangadu panchayat ,Nithravilai ,Regikumar ,Parutivlai ,Baruthivilai ,Kuttithara ,Dinakaran ,
× RELATED கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டாஸ்