தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ₹560 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஒரு நிலையில் இல்லாமல் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரு சவரன் ₹44,168க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதன் பிறகு 25ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. 25ம் தேதி தங்கம் விலை சவரன் ₹8 குறைந்து ஒரு சவரன் ₹44,160க்கு விற்கப்பட்டது.

26ம் தேதி சவரனுக்கு ₹120 குறைந்து ஒரு சவரன் ₹44,040க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹5,480க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹43,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹70 குறைந்து ஒரு கிராம் ₹5,410க்கும், சவரனுக்கு ₹560 குறைந்து ஒரு சவரன் ₹43,280க்கும் விற்கப்பட்டது.

இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹888 குறைந்துள்ளது. இது மேலும் நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The post தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: