வத்தலக்குண்டு, ஆத்தூர் ஒன்றியம் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

பட்டிவீரன்பட்டி/ வத்தலக்குண்டு: ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் மற்றும் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சித்தரேவில் அமைந்துள்ள இப்பள்ளியில் 357 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்த பழைய வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்ததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமடைந்து வந்தனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பேரில் தற்போது புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் வளர்மதி மலர்கண்ணன், துணை தலைவர் எழில்மாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புரோஸ்கான், நாகுமாடசாமி, லட்சுமி, ஊராட்சி செயலாளர் சிவராஜன், திமுக கிளை செயலாளர்கள் சுதாகன், இலியாஸ், ஆரோக்கியம், கணேசன், ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*வத்தலக்குண்டு ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி பூவம்பட்டி, மீனாங்கண்ணிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு தலா 2 வகுப்பறை கட்டிடங்கள தலா ரூ.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் காணொலி மூலம் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், முனியாண்டி, ஒன்றிய குழு துணை தலைவர் முத்து, ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், திமுக நிர்வாகிகள் செல்வராஜ், முருகேசன், அமுதவேல், கார்த்திக், சகாப்தின், மாணிக்கம், நரசிம்மன், சந்திரசேகர், நகர் முக்கிய பிரமுகர்கள் ராமசாமி, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

The post வத்தலக்குண்டு, ஆத்தூர் ஒன்றியம் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: