மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி நாளை, 2ம் தேதி மதுக்கடை மூடல்: திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003ன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும்.

அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் நாளை (28ம் தேதி) வியாழக்கிழமை மிலாது நபி மற்றும் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 நாட்கள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி நாளை, 2ம் தேதி மதுக்கடை மூடல்: திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: