தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹120 குறைந்தது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரு சவரன் ₹44,168க்கு விற்கப்பட்டது.ஞாயிற்று கிழமைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மாாக்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ஒரு கிராம் ₹5,520க்கும், சவரனுக்கு ₹8 குறைந்து ஒரு சவரன் ₹44,160க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ₹15 குறைந்து ஒரு கிராம் ₹5,505க்கும், சவரனுக்கு ₹120 குறைந்து ஒரு சவரன் ₹44,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: