ஆர்.கே.பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்: எம்எல்ஏ அடிக்கல்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட 2 மாடி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய கவுன்சிலர் பிரமிளா வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்டிடப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி இயக்குநர் முரளி, ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனி, சண்முகம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், நிர்வாகிகள் சுப்பிரமணி, ரகு, ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சத்தியராஜ், ஆனந்தி செங்குட்டுவன், மோகன், மோனிஷா சரவணன், ராமசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: