திருபுவனை அருகே வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றிய ஊழியர்கள்

திருபுவனை, செப். 27: திருபுவனை அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீரை ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர். திருபுவனை அடுத்த குச்சிபாளையம் அருகே பி.எஸ்.பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் தோப்பு தெருவில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். சமீபத்தில் போடப்பட்ட மதகடிப்பட்டு திருக்கனூர் சாலை உயரமாக போடப்பட்டுள்ளது. இதனால் தோப்பு தெரு சாலையில் நீர் வெளியேற முடியாமல் சாலையிலே தேங்கி நின்றது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ஆணையர் எழில்ராஜன் உத்தரவின்பேரில் சாலையில் தேங்கிய தண்ணீர் முழுவதும் ஊழியர்கள் வெளியேற்றினர். சாலை தாழ்வாக இருப்பதால் அடிக்கடி இப்பிரச்னை நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

The post திருபுவனை அருகே வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றிய ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: